• Apr 16 2025

கண்டி மாநகரில் உள்ள உணவகங்கள் விசேட கண்காணிப்பில்!

Chithra / Apr 16th 2025, 9:33 am
image

 

கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னம் காட்சிப்படுத்தப்படும் காலப்பகுதியில் கண்டி மாநகரில் உள்ள உணவகங்கள் விசேட  கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட உள்ளதாக கண்டி மாநகர சபை பிரதான  வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.

ஶ்ரீதலதா மாளிகை கண்காட்சி தொடர்பாக கண்டி மாநகர சபையின் சுகாதார வைத்தியப்பிரிவில்  நடைபெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 

மேற்படி விசேட வேலைத்திட்டத்தின்  அடிப்படையில் நகர எல்லையிலுள்ள உணவகங்கள், நடமாடும் விற்பனை நிறுவனங்கள்  மற்றும் நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அன்னதானம் வழங்குவோர் உட்பட அனைத்து அமைப்புக்களும் பரிசோதனை செய்யப்படும். 

மேலும் அன்னதானம், தானசாலை போன்ற உணவு வழங்கும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடமாடும் உணவு வர்த்தகர்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.

அத்துடன் அவர்கள் எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான விதிகள் அடங்கிய பிரமாணக்குறிப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி மாநகரில் உள்ள உணவகங்கள் விசேட கண்காணிப்பில்  கண்டி ஶ்ரீ தலதா மாளிகையின் புனித சின்னம் காட்சிப்படுத்தப்படும் காலப்பகுதியில் கண்டி மாநகரில் உள்ள உணவகங்கள் விசேட  கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட உள்ளதாக கண்டி மாநகர சபை பிரதான  வைத்திய அதிகாரி வைத்தியர் பசன் ஜயசிங்க தெரிவித்தார்.ஶ்ரீதலதா மாளிகை கண்காட்சி தொடர்பாக கண்டி மாநகர சபையின் சுகாதார வைத்தியப்பிரிவில்  நடைபெற்ற  ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேற்படி விசேட வேலைத்திட்டத்தின்  அடிப்படையில் நகர எல்லையிலுள்ள உணவகங்கள், நடமாடும் விற்பனை நிறுவனங்கள்  மற்றும் நடைபாதை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அன்னதானம் வழங்குவோர் உட்பட அனைத்து அமைப்புக்களும் பரிசோதனை செய்யப்படும். மேலும் அன்னதானம், தானசாலை போன்ற உணவு வழங்கும் அனைத்து தொண்டு நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நடமாடும் உணவு வர்த்தகர்களும் பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளது.அத்துடன் அவர்கள் எவ்வாறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான விதிகள் அடங்கிய பிரமாணக்குறிப்பும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement