• Oct 18 2024

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் நினைவேந்தல்! samugammedia

Chithra / Apr 29th 2023, 7:18 pm
image

Advertisement

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் நினைவேந்தப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம் ஆண்டு நினைவு தினமும், ரஜீவர்மனின் 16ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் மாலை இடம்பெற்றது.

ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.

அதேவேளை, ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் நினைவேந்தல் samugammedia படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் யாழ்.ஊடக அமையத்தில் நினைவேந்தப்பட்டது.படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான சிவராமனின் 18ஆம் ஆண்டு நினைவு தினமும், ரஜீவர்மனின் 16ஆம் ஆண்டு நினைவு தினமும் யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம் மாலை இடம்பெற்றது.ஊடகவியலாளரான தராக்கி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, நாடாளுமன்றத்துக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டார்.அதேவேளை, ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement