ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டும் உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியும் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் தாக்குதல்களை நடத்தப்போவதாக முன்னர் அச்சுறுத்தியிருந்த போதிலும், பின்னர் அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகிய ட்ரம்ப், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகச் செயற்படும் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைக்குத் தான் இணங்கியதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, "ஈரான் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரை, ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை நிறுத்துவதற்குத்" தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடிக்க ட்ரம்ப் முடிவு ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டும் உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியும் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இரு நாடுகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர் தாக்குதல்களை நடத்தப்போவதாக முன்னர் அச்சுறுத்தியிருந்த போதிலும், பின்னர் அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகிய ட்ரம்ப், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராகச் செயற்படும் பாகிஸ்தான் விடுத்த கோரிக்கைக்குத் தான் இணங்கியதாகத் தெரிவித்தார்.இதற்கமைய, "ஈரான் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒன்றிணைந்த முன்மொழிவை முன்வைக்கும் வரை, ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை நிறுத்துவதற்குத்" தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.