நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஆடைத் துறையில் தங்கி இருப்பதால், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கையால் நாட்டின் ஆடைத் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தொடர்புடைய இறக்குமதி வரிக் கொள்கை பொருந்தும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை மற்றும் அதன் விளைவாக நாட்டைப் பாதித்த பிரச்சினைகள் குறித்து, இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசாங்கம் ஒரு தீர்வைக் கோரியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும் விசேட கலந்துரையாடலின் போது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான முன்மொழிவு அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் வரி கொள்கையால் நாட்டின் ஆடைத்துறைக்கு பாரிய பாதிப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல் நாட்டின் பெரும்பாலான ஏற்றுமதிகள் ஆடைத் துறையில் தங்கி இருப்பதால், அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கையால் நாட்டின் ஆடைத் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் என தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை இலங்கையை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.இருப்பினும், இந்த நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் தொடர்புடைய இறக்குமதி வரிக் கொள்கை பொருந்தும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரிக் கொள்கை மற்றும் அதன் விளைவாக நாட்டைப் பாதித்த பிரச்சினைகள் குறித்து, இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அரசாங்கம் ஒரு தீர்வைக் கோரியதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறும் விசேட கலந்துரையாடலின் போது அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கான முன்மொழிவு அந்நாட்டு அதிகாரிகளிடம் முன்வைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.