• Nov 25 2024

கொழும்பில் காச நோயாளர்கள் அதிகரிப்பு!

Anaath / Sep 20th 2024, 2:08 pm
image

மேல்மாகாணத்தில் கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய  நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் பதிவாகிய காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் காச நோயாளர்கள் அதிகரிப்பு மேல்மாகாணத்தில் கடந்த வருடம் பதிவான காசநோயாளிகளின் எண்ணிக்கையில் 46 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக காசநோய் மற்றும் மார்பு நோய்கள் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார வைத்திய  நிபுணர் மிசாயா காதர் தெரிவித்துள்ளார்.அவர்களில் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாநகர சபையின் எல்லைக்குள் மட்டுமே பதிவாகியுள்ள காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் எண்ணிக்கைக்கு சமமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.இது குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அத்துடன் பதிவாகிய காசநோயாளிகளில் பெரும்பாலானோர் ஆண்கள் எனவும். புகைபிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதே இதற்குக் காரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement