• Dec 14 2024

முல்லைத்தீவில் கொந்தளிக்கும் கடல்; பொங்கி எழும் அலை- மக்களே அவதானம்..!

Sharmi / Nov 27th 2024, 10:30 am
image

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடல் பரப்பு என்றுமில்லாதவாறு கொந்தளிப்பு நிலமையுடன் காணப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. 

இந்நிலையில்  கிழக்கில்  இருந்த  காற்றழுத்த  தாழ்வு நிலை  தற்போது புயலாக  மாறி வடக்கை நோக்கி நகர்ந்து வருகின்றது . 

இந்நிலையில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  பாெக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு  கடல்கள்  என்றுமில்லாதவாறு  கடும்  சீற்றத்துடன்  கொந்தளிப்பான நிலையில்  காணப்படுகின்றது.

இதனையடுத்து முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் தாெழிலுக்கு செல்லாது பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


முல்லைத்தீவில் கொந்தளிக்கும் கடல்; பொங்கி எழும் அலை- மக்களே அவதானம். நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கடல் பரப்பு என்றுமில்லாதவாறு கொந்தளிப்பு நிலமையுடன் காணப்படுகின்றது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில்  கிழக்கில்  இருந்த  காற்றழுத்த  தாழ்வு நிலை  தற்போது புயலாக  மாறி வடக்கை நோக்கி நகர்ந்து வருகின்றது . இந்நிலையில்  முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள  பாெக்கணை, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு  கடல்கள்  என்றுமில்லாதவாறு  கடும்  சீற்றத்துடன்  கொந்தளிப்பான நிலையில்  காணப்படுகின்றது.இதனையடுத்து முல்லைத்தீவு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவர்கள் தாெழிலுக்கு செல்லாது பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement