இந்த அரசாங்கம் கொண்டு வருவதாக கூறும் மாற்றமானது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கும், இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே அவை இருக்கும். எமது போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.
மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது இனத்தின் சுதந்திர விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த மாவீரர்களை நினைவு கூரும் புனித நாள் மாவீரர் நாள்.
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஆட்சியாளர்கள் எமது இனத்தை அடிமைகளாக்க நினைத்தார்கள். அதனை எமது போராளிகள் எதிர்த்து நின்று போராடி எமது இனத்தைப் பாதுகாத்தார்கள்.
எமது இனத்தின் பாதுகாப்பிற்காகப் போராடி களத்திலே மடிந்த மாவீரர்களின் இலட்சிக் கனவினை எமது நெஞ்சிலே சுமந்த படி எமது விடுதலைக்கான பயணத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்து வருகின்றோம்.
இந்த விடுதலைப் பயணமானது எமது சவால் மிகுந்த பயணமாகவே இருக்கின்றது.
தற்போதைய சூழலில் இலங்கை ஒரு ஆட்சி மாற்றத்தைச் சந்தித்துள்ளது. சிங்கள மக்களின் பலமான வாக்குப் பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் வந்திருக்கின்றது.
தமிழினத்தின் சுதந்திரத்திற்காக அரசியல் ரீதியாகப் போராடி வந்த எமது அரசியற் தலைவர்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவால் 30 வருட காலமாக ஆயுதப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டது. அந்த ஆய்தப் போராட்டத்தின் வெற்றியாகவே தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தி தமிழினத்தின் இருப்பை இங்கு நிலைநிறுத்தியது.
அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து அது அரசியல் ரீதியான போராட்டமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாவீரர் கண்ட கனவுகள், அவர்கள் சிந்திய இரத்தங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் அனைத்துமே எமது மக்களின் விடுதலையை நேசித்தது மாத்திரமே. அந்த மாவீரர்களின் தியாகங்கள் அர்ப்பணிப்புகளை நாம் உணர்ந்து கொண்டு அனைவரும் ஒரு தேசத்தின் மக்களாக அணிதிரண்டு எமது விடுதலையை வென்றெடுக்க ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
எமது தமிழ்த்தேசிய அரசியல் இன்று சிதைவுற்று பலவீனப்பட்ட ஒரு நிலையில் காணப்படுகின்றது. இது எமது தமிழினத்தின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையாது. எதிர்காலத்தில் எங்களை நாங்களே ஆளவேண்டும் என்ற கோட்பாட்டைப் பிடிங்கிக் கொண்டு செல்லும் தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கே அது தீணி போடும். ஆனால் எமது கிழக்கு மாகாணம் இதற்கு விதிவிலக்கான நிலையில் ஒரு மாற்றத்தைக் காண்பித்திருக்கின்றது.
ஜே.வி.பி இன் போராட்டம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே தவிர சுதந்திர விடுதலைக்கான போராட்டம் அல்ல. சிங்கள ஆட்சியாளர்களால் எமது இனம் அடக்கி ஒடுக்கப்பட்டதன் காரணத்தினாலேயே எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.
எனவே தற்போது எமது போராட்டத்தையும் ஜே.வி.பி. இன் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயம்.
தற்போது ஜே.வி.பி தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு வரலாறே இருக்கின்றது. இன்று அவர்கள் ஒரு புதிய பெயருடன் இலங்கை முழுவதும் தமிழர் பகுதியிலும் வந்து கொண்டு இன்று ஒரு நல்லாட்சியைக் கொண்டு வந்துள்ளோம், இனவாதம் கிடையாது, அனைவரும் ஒன்றுபட்ட மக்கள், ஒரே நாடு, அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என்ற கருத்துகளோடு தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாகத் துடைத்தெறியும் செயற்பாடுகள் எமது தாயகப் பகுதிகளிலே நடந்தேறி வருகின்றன.
இந்த அடிப்படையில் இராணுவ முகாம்கள் அகற்றல் காணி விடுவிப்பு போன்ற விடயங்களைத் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களாகவே மக்கள் பார்க்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாறு அல்ல இவை அனைத்தும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகத் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் மேற்கொள்ளும் நடவடிகைகளே.
உலக நாடுகளின் கடன் பெறுகைகள், பாதுகாப்பு செலவீனங்களைக் குறைத்தல் என்ற செயற்பாட்டை வெளிப்படுத்துவது போன்றவற்றிற்காகவே இராணுவ வீரர்களின் குறைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
மாற்றமொன்றைக் கொண்டு வருவதாக இந்த அரசாங்கம் சொல்லியிருக்கின்றது. இது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கான மாற்றமாகவே இருக்கும்.
இவை அனைத்தும் இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே இருக்கின்றன.
தற்போதைய நிலையில் எமது தேசியத்தைப் பாதுகாக்கும் பலமாக எமது வாக்கு மட்டுமே இருக்கின்றது. இந்த வாக்குப் பலத்தினைச் சிதைத்து சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பகுதிகளில் தங்களின் பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்வதற்காக அவர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் காண்பித்து எமது மக்களை ஏமாற்றி சிங்கள தேசியவாதத்திற்குப் பின்னால் இழுத்துச் செல்லும் தந்திரோபாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை எமது மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்றைய சூழலில் கிழக்கில் மாறாமல் வெற்றியடைந்துள்ள தமிழ்த் தேசிய வெற்றியானது வடக்கை நோக்கி நகரும். இதில் எமது அரசியற் தலைவர்களும் நிலமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.
தற்போதைய இளைஞர்கள் மத்தியில் எமது போராட்ட வரலாறுகள் கடத்தப்படாதமையும் தமிழ்த் தேசியத்தின் தோல்வி நிலைக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. இந்த வரலாற்றுத் தவறை நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் தமிழ்த் தேசிய அரசியலில் தனித்து உரிமை சார்ந்த விடயங்களை மாத்திரம் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்ட சமாதான காலத்திலும் கூட எம்மால் யுத்தத்தால் நலிவுற்ற எமது பிரதேசங்களுக்குரிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். எனவே தற்போதைய சூழலிலே நாங்கள் இந்த விடயங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும்.
நாம் ஒவ்வொரு ஆண்டும் எமது மாவீரர்களை நினைவு கூருவது எமது மரபாகும். எமது மாவீரர்களின் ஆத்மா எம்மை வழிநடத்தக் கூடிய விதமாக நாம் எம்மைப் புனிதர்களாக மாற்றி எமது இலட்சியத்தை அடையக் கூடிய உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து அந்த மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
எமது வீரர்களின் போராட்டத்தையும், ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து சித்தரிப்பது வெட்கக்கேடானது-ஜனநாயகப் போராளிகள் கட்சி கண்டனம். இந்த அரசாங்கம் கொண்டு வருவதாக கூறும் மாற்றமானது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கும், இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே அவை இருக்கும். எமது போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முன்னாள் செயலாளர் இ.கதிர் தெரிவித்தார்.மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது இனத்தின் சுதந்திர விடுதலைக்காகப் போராடி வீரமரணமடைந்த மாவீரர்களை நினைவு கூரும் புனித நாள் மாவீரர் நாள்.இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த ஆட்சியாளர்கள் எமது இனத்தை அடிமைகளாக்க நினைத்தார்கள். அதனை எமது போராளிகள் எதிர்த்து நின்று போராடி எமது இனத்தைப் பாதுகாத்தார்கள். எமது இனத்தின் பாதுகாப்பிற்காகப் போராடி களத்திலே மடிந்த மாவீரர்களின் இலட்சிக் கனவினை எமது நெஞ்சிலே சுமந்த படி எமது விடுதலைக்கான பயணத்தை அரசியல் ரீதியாக முன்னெடுத்து வருகின்றோம். இந்த விடுதலைப் பயணமானது எமது சவால் மிகுந்த பயணமாகவே இருக்கின்றது. தற்போதைய சூழலில் இலங்கை ஒரு ஆட்சி மாற்றத்தைச் சந்தித்துள்ளது. சிங்கள மக்களின் பலமான வாக்குப் பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் வந்திருக்கின்றது.தமிழினத்தின் சுதந்திரத்திற்காக அரசியல் ரீதியாகப் போராடி வந்த எமது அரசியற் தலைவர்கள் ஏமாற்றப்பட்டதன் விளைவால் 30 வருட காலமாக ஆயுதப் போராட்டம் இந்த மண்ணிலே நிகழ்த்தப்பட்டது. அந்த ஆய்தப் போராட்டத்தின் வெற்றியாகவே தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தி தமிழினத்தின் இருப்பை இங்கு நிலைநிறுத்தியது. அந்த ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதிலிருந்து அது அரசியல் ரீதியான போராட்டமாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மாவீரர் கண்ட கனவுகள், அவர்கள் சிந்திய இரத்தங்கள், தியாகங்கள், அர்ப்பணிப்புகள் அனைத்துமே எமது மக்களின் விடுதலையை நேசித்தது மாத்திரமே. அந்த மாவீரர்களின் தியாகங்கள் அர்ப்பணிப்புகளை நாம் உணர்ந்து கொண்டு அனைவரும் ஒரு தேசத்தின் மக்களாக அணிதிரண்டு எமது விடுதலையை வென்றெடுக்க ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.எமது தமிழ்த்தேசிய அரசியல் இன்று சிதைவுற்று பலவீனப்பட்ட ஒரு நிலையில் காணப்படுகின்றது. இது எமது தமிழினத்தின் எதிர்காலத்திற்கு உகந்ததாக அமையாது. எதிர்காலத்தில் எங்களை நாங்களே ஆளவேண்டும் என்ற கோட்பாட்டைப் பிடிங்கிக் கொண்டு செல்லும் தற்போதைய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கே அது தீணி போடும். ஆனால் எமது கிழக்கு மாகாணம் இதற்கு விதிவிலக்கான நிலையில் ஒரு மாற்றத்தைக் காண்பித்திருக்கின்றது. ஜே.வி.பி இன் போராட்டம் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போராட்டமே தவிர சுதந்திர விடுதலைக்கான போராட்டம் அல்ல. சிங்கள ஆட்சியாளர்களால் எமது இனம் அடக்கி ஒடுக்கப்பட்டதன் காரணத்தினாலேயே எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதனை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே தற்போது எமது போராட்டத்தையும் ஜே.வி.பி. இன் போராட்டத்தையும் இணைத்து அதுவும் எமது தமிழ் மக்கள் சித்தரிப்பதென்பது நாமே நம்மை எண்ணி வெட்கப்பட வேண்டிய விடயம்.தற்போது ஜே.வி.பி தொடர்பில் தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு வரலாறே இருக்கின்றது. இன்று அவர்கள் ஒரு புதிய பெயருடன் இலங்கை முழுவதும் தமிழர் பகுதியிலும் வந்து கொண்டு இன்று ஒரு நல்லாட்சியைக் கொண்டு வந்துள்ளோம், இனவாதம் கிடையாது, அனைவரும் ஒன்றுபட்ட மக்கள், ஒரே நாடு, அனைவருக்கும் சுதந்திரம் வழங்கப்படும் என்ற கருத்துகளோடு தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை முற்றுமுழுதாகத் துடைத்தெறியும் செயற்பாடுகள் எமது தாயகப் பகுதிகளிலே நடந்தேறி வருகின்றன. இந்த அடிப்படையில் இராணுவ முகாம்கள் அகற்றல் காணி விடுவிப்பு போன்ற விடயங்களைத் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விடயங்களாகவே மக்கள் பார்க்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாறு அல்ல இவை அனைத்தும் உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகத் தங்கள் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் மேற்கொள்ளும் நடவடிகைகளே.உலக நாடுகளின் கடன் பெறுகைகள், பாதுகாப்பு செலவீனங்களைக் குறைத்தல் என்ற செயற்பாட்டை வெளிப்படுத்துவது போன்றவற்றிற்காகவே இராணுவ வீரர்களின் குறைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. மாற்றமொன்றைக் கொண்டு வருவதாக இந்த அரசாங்கம் சொல்லியிருக்கின்றது. இது ஒருபோதும் தமிழ் மக்களுக்கான மாற்றமாக இருக்காது. மாறாக சிங்கள ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைப் பலமாகத் தக்க வைத்துக் கொள்வதற்கான மாற்றமாகவே இருக்கும். இவை அனைத்தும் இந்த நாட்டைத் தனிச் சிங்கள நாடாக மாற்றும் மென்போக்கான நகர்வுகளாகவே இருக்கின்றன. தற்போதைய நிலையில் எமது தேசியத்தைப் பாதுகாக்கும் பலமாக எமது வாக்கு மட்டுமே இருக்கின்றது. இந்த வாக்குப் பலத்தினைச் சிதைத்து சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் பகுதிகளில் தங்களின் பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்வதற்காக அவர்களைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகக் காண்பித்து எமது மக்களை ஏமாற்றி சிங்கள தேசியவாதத்திற்குப் பின்னால் இழுத்துச் செல்லும் தந்திரோபாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை எமது மக்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் கிழக்கில் மாறாமல் வெற்றியடைந்துள்ள தமிழ்த் தேசிய வெற்றியானது வடக்கை நோக்கி நகரும். இதில் எமது அரசியற் தலைவர்களும் நிலமைகளை உணர்ந்து செயற்பட வேண்டும்.தற்போதைய இளைஞர்கள் மத்தியில் எமது போராட்ட வரலாறுகள் கடத்தப்படாதமையும் தமிழ்த் தேசியத்தின் தோல்வி நிலைக்கு ஒரு காரணமாக இருக்கின்றது. இந்த வரலாற்றுத் தவறை நாங்கள் திருத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் தமிழ்த் தேசிய அரசியலில் தனித்து உரிமை சார்ந்த விடயங்களை மாத்திரம் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அபிவிருத்தி சார்ந்த விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆயுதப் போராட்ட சமாதான காலத்திலும் கூட எம்மால் யுத்தத்தால் நலிவுற்ற எமது பிரதேசங்களுக்குரிய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தோம். எனவே தற்போதைய சூழலிலே நாங்கள் இந்த விடயங்களையும் கருத்திற்கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு ஆண்டும் எமது மாவீரர்களை நினைவு கூருவது எமது மரபாகும். எமது மாவீரர்களின் ஆத்மா எம்மை வழிநடத்தக் கூடிய விதமாக நாம் எம்மைப் புனிதர்களாக மாற்றி எமது இலட்சியத்தை அடையக் கூடிய உறுதியான நிலைப்பாட்டை நாங்கள் எடுத்து அந்த மாவீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்காகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.