• Apr 03 2025

தைவானில் பதிவான இரட்டை நிலநடுக்கம் - 7 நிமிட இடைவெளிக்குள் இடம்பெற்ற அசம்பாவிதம்..!!

Tamil nila / May 6th 2024, 9:30 pm
image

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு நாடாக காணப்படும்  தைவான்னில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. 

மேலும் சுமார் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது   5.9 ரிக்டர்   அளவிலானநிலநடுக்கம் மாலை 5:52 மணிக்கு ஏற்பட்டதாக மத்திய வானிலை நிர்வாகம் (சி.டபிள்யூ. ஏ) தெரிவித்துள்ளது.

20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை

நிலநடுக்கத்தின் தீவிரம் ஹுவாலியன் கவுண்டி, டைட்டுங் கவுண்டி மற்றும் நாந்தோ கவுண்டிவரை காணப்பட்டது . தைச்சுங், யிலான் கவுண்டி, சியாயி கவுண்டி, யுன்லின் கவுண்டி, சாங்குவா கவுண்டி, சியாயி மற்றும் தைனானில் மந்தமான நடுக்கம் உணரப்பட்டது

தைவானில் பதிவான இரட்டை நிலநடுக்கம் - 7 நிமிட இடைவெளிக்குள் இடம்பெற்ற அசம்பாவிதம். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒரு நாடாக காணப்படும்  தைவான்னில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கு கடற்கரை மாவட்டமான ஹுவாலியன் கவுண்டியில் உள்ள கடல் பகுதியில் இன்றும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.உள்ளூர் நேரப்படி மாலை 5.45 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் சுமார் ஏழு நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது   5.9 ரிக்டர்   அளவிலானநிலநடுக்கம் மாலை 5:52 மணிக்கு ஏற்பட்டதாக மத்திய வானிலை நிர்வாகம் (சி.டபிள்யூ. ஏ) தெரிவித்துள்ளது.20 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லைநிலநடுக்கத்தின் தீவிரம் ஹுவாலியன் கவுண்டி, டைட்டுங் கவுண்டி மற்றும் நாந்தோ கவுண்டிவரை காணப்பட்டது . தைச்சுங், யிலான் கவுண்டி, சியாயி கவுண்டி, யுன்லின் கவுண்டி, சாங்குவா கவுண்டி, சியாயி மற்றும் தைனானில் மந்தமான நடுக்கம் உணரப்பட்டது

Advertisement

Advertisement

Advertisement