துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டிற்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் குருநாகலைச் சேர்ந்த 41 வயதுடையவ சந்தேக நபரிடமிருந்து 10,000 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,
மற்றொரு பெண் சந்தேக நபரிடமிருந்து 23,600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
துபாயில் இருந்து வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சட்டவிரோதமாக நாட்டிற்கு சிகரெட்டுகளை கொண்டு வந்த இரண்டு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் குருநாகலைச் சேர்ந்த 41 வயதுடையவ சந்தேக நபரிடமிருந்து 10,000 சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு பெண் சந்தேக நபரிடமிருந்து 23,600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.