வரவு - செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. வரவு - செலவு திட்டத்திலும் அவை உள்வாங்கப்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன.
வாழ்க்கை செலவுக்கமைய 6 மாதங்களுக்கொருமுறை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என அன்று கூறினர்.
ஆனால் இன்று எம்மால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.
அன்று ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களையே இன்று இவர்களும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
நாடு அநுரவுக்கு எனக் கூறிய இளைஞர்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். தொழில் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவது எமக்கு சாதாரண விடயம் என்று கூறியவர்கள், இன்று அவர்களைப் பற்றி கவனத்தில் கொள்வதில்லை.
பட்டதாரிகள் மாத்திரமின்றி வைத்தியர்கள், தாதியர்களும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை ஆரம்பித்திருக்கின்றனர்.
எனவே இனியும் ஏமாறாது உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். என்றார்.
நாடு அநுரவுக்கு எனக் கூறிய இளைஞர்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர் துமிந்த குற்றச்சாட்டு வரவு - செலவு திட்டத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றும் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன. வரவு - செலவு திட்டத்திலும் அவை உள்வாங்கப்படவில்லை. மக்களின் எதிர்பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன.வாழ்க்கை செலவுக்கமைய 6 மாதங்களுக்கொருமுறை அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்படும் என அன்று கூறினர். ஆனால் இன்று எம்மால் இவ்வளவு தான் வழங்க முடியும் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். அன்று ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த வேலைத்திட்டங்களையே இன்று இவர்களும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.நாடு அநுரவுக்கு எனக் கூறிய இளைஞர்கள் இன்று வீதிக்கு இறங்கியுள்ளனர். தொழில் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குவது எமக்கு சாதாரண விடயம் என்று கூறியவர்கள், இன்று அவர்களைப் பற்றி கவனத்தில் கொள்வதில்லை. பட்டதாரிகள் மாத்திரமின்றி வைத்தியர்கள், தாதியர்களும் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை ஆரம்பித்திருக்கின்றனர்.எனவே இனியும் ஏமாறாது உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் சிந்தித்து வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்கின்றோம். என்றார்.