• Nov 26 2024

கல்முனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

Chithra / Oct 3rd 2024, 10:09 am
image

 

சட்டவிரோதமாக வெளிநாட்டு  சிகரெட்டுகளை  முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை  இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து விசேட தேர்ச்சி பெற்ற  அணியினர்  தேடுதல் நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.

இதன்போது, அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான  முறையில் பயணம் செய்து கொண்டிருந்த  முச்சக்கரவண்டியை இடைமறித்து  சோதனை மேற்கொண்டனர்.

குறித்த முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் பயணப் பொதியில்  கடத்தி  வரப்பட்ட  பெருந்தொகையான சட்டவிரோத வெளிநாட்டு  சிகரட் கார்ட்டுன்கள்  மீட்கப்பட்டதுடன்,  இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து  பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய  20,200 சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகள்   கல்முனை பகுதியில் உள்ள பாதணிகள் விற்கின்ற கடை ஒன்றிற்கு கடத்த முற்பட்ட வேளை  விசேட அதிரடிப்படையினரால் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், கைதான சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், 

சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்கின்றனர்.

கல்முனையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது  சட்டவிரோதமாக வெளிநாட்டு  சிகரெட்டுகளை  முச்சக்கரவண்டி ஒன்றில் சூட்சுமமான முறையில் கடத்தி வந்த இரு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.இன்று வியாழக்கிழமை (03) அதிகாலை  இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில்  பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து விசேட தேர்ச்சி பெற்ற  அணியினர்  தேடுதல் நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.இதன்போது, அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதான வீதியில் வைத்து சந்தேகத்திற்கிடமான  முறையில் பயணம் செய்து கொண்டிருந்த  முச்சக்கரவண்டியை இடைமறித்து  சோதனை மேற்கொண்டனர்.குறித்த முச்சக்கரவண்டியில் சூட்சுமமான முறையில் பயணப் பொதியில்  கடத்தி  வரப்பட்ட  பெருந்தொகையான சட்டவிரோத வெளிநாட்டு  சிகரட் கார்ட்டுன்கள்  மீட்கப்பட்டதுடன்,  இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களிடமிருந்து  பல இலட்சம் ரூபா பெறுமதியுடைய  20,200 சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகள்   கல்முனை பகுதியில் உள்ள பாதணிகள் விற்கின்ற கடை ஒன்றிற்கு கடத்த முற்பட்ட வேளை  விசேட அதிரடிப்படையினரால் கைது நடவடிக்கை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும், கைதான சந்தேக நபர்கள் சான்றுப் பொருட்களுடன் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொள்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement