• Mar 16 2025

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன் கைது!

Chithra / Mar 16th 2025, 3:56 pm
image


பல்வேறு கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கடந்த ஒருவருட காலமாக தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் வைத்து  கிளிநொச்சி குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது அவர்கள் களவாடிய 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தங்க நகைகள் என்பன மீட்கப்பட்டன. 

இதன்போது ஒருவரிடமிருந்து 5.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர்கள் இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றத்தின் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 6 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிவான் அனுமதி வழங்கினார். 

இது குறித்து கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதான சந்தேகநபர் ஏறாவூர், கரடியனாறு, அக்கராயன்குளம், யாழ்ப்பாணம், போன்ற பகுதிகளில் புரியப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் தேடப்பட்டு வந்தவர் என்றும், அவருக்கு 10க்கும் மேற்பட்ட பிடியாணைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன் கைது பல்வேறு கொள்ளை மற்றும் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கடந்த ஒருவருட காலமாக தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியில் வைத்து  கிளிநொச்சி குற்றப்புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அவர்கள் களவாடிய 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் தங்க நகைகள் என்பன மீட்கப்பட்டன. இதன்போது ஒருவரிடமிருந்து 5.5 கிராம் நிறையுடைய ஹெரோயின் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டது.சந்தேகநபர்கள் இன்றையதினம் கிளிநொச்சி நீதிமன்றத்தின் பதில் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 6 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிவான் அனுமதி வழங்கினார். இது குறித்து கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.பிரதான சந்தேகநபர் ஏறாவூர், கரடியனாறு, அக்கராயன்குளம், யாழ்ப்பாணம், போன்ற பகுதிகளில் புரியப்பட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் தேடப்பட்டு வந்தவர் என்றும், அவருக்கு 10க்கும் மேற்பட்ட பிடியாணைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement