• May 09 2024

இலங்கைக்குள் இரகசியமாக நுழைந்துள்ள இரு நாடுகள்! சிங்கப்பூர் எச்சரிக்கை

Chithra / Dec 28th 2022, 8:39 am
image

Advertisement

கடந்த ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்குண்ட நிலையில் அண்டை நாடான இந்தியா, சீனாவின் நிழல் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இந்தியா, கடந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவான உதவியாக வழங்கியது. சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாகி வருகின்றது.

இந்த நிலையில், பிராந்திய போட்டியாளரான சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதில் இந்தியா நீண்ட கால முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள முயல்வதாக அமைச்சர் ஒருவரை கோடிட்டு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இந்தியா, இலங்கையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு, இந்தியா ஒருவேளை மூலோபாய ரீதியாக அதைப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


எனினும் இலங்கையில் அதன் திட்டங்கள் மற்றும் மூலோபாய நோக்கங்கள் குறித்து ரொய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக வடஇலங்கையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள புதுப்பிக்கப்பட்ட சக்தி உட்பட்ட திட்டங்கள், கடந்த 15 வருடங்களாகக் கட்டியெழுப்பட்டுள்ள, இலங்கை தீவின் தெற்கில் சீனாவின் விரிவான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் சமப்படுத்த புதுடில்லிக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இலங்கையின் தமிழ் ஆதிக்கம் நிறைந்த வடபகுதியும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்துடன் இன உறவுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும்  தெரிவித்துள்ளது. 

இலங்கைக்குள் இரகசியமாக நுழைந்துள்ள இரு நாடுகள் சிங்கப்பூர் எச்சரிக்கை கடந்த ஏழு தசாப்தங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்குண்ட நிலையில் அண்டை நாடான இந்தியா, சீனாவின் நிழல் இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இந்தியா, கடந்த ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை விரைவான உதவியாக வழங்கியது. சர்வதேச நாணய நிதியத்திடம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தத்தை முடித்துக் கொண்ட இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரமாகி வருகின்றது.இந்த நிலையில், பிராந்திய போட்டியாளரான சீனாவின் செல்வாக்கை எதிர்கொள்வதில் இந்தியா நீண்ட கால முதலீடுகளை இலங்கையில் மேற்கொள்ள முயல்வதாக அமைச்சர் ஒருவரை கோடிட்டு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை இந்தியா, இலங்கையில் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் முதலீடு செய்யும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை கருத்திற்கொண்டு, இந்தியா ஒருவேளை மூலோபாய ரீதியாக அதைப் பார்க்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் இலங்கையில் அதன் திட்டங்கள் மற்றும் மூலோபாய நோக்கங்கள் குறித்து ரொய்ட்டர்ஸின் கேள்விகளுக்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.குறிப்பாக வடஇலங்கையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள புதுப்பிக்கப்பட்ட சக்தி உட்பட்ட திட்டங்கள், கடந்த 15 வருடங்களாகக் கட்டியெழுப்பட்டுள்ள, இலங்கை தீவின் தெற்கில் சீனாவின் விரிவான உள்கட்டமைப்புத் திட்டங்களைச் சமப்படுத்த புதுடில்லிக்கு உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்தநிலையில் இலங்கையின் தமிழ் ஆதிக்கம் நிறைந்த வடபகுதியும் தென்னிந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்துடன் இன உறவுகளைப் பகிர்ந்து கொள்வதாகவும்  தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement