குருணாகல் - நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனிகிதவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நிக்கவெரட்டிய, தனிகிதவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நிக்கவெரட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொலன்னறுவை - தியபெதும பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கல்பிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் நேற்று புதன்கிழமை (12) இரவு உயிரிழந்துள்ளதாக தியபெதும பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கிரித்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் தனது மகளின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ள நிலையில், நேற்றைய தினம் இரவு திக்கல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வயலுக்குச் சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தியபெதும பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நாட்டில் அடுத்தடுத்து உயிரிழந்த இரு வயோதிபர்கள்; நடந்தது என்ன குருணாகல் - நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனிகிதவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிக்கவெரட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.நிக்கவெரட்டிய, தனிகிதவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் நிக்கவெரட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளை நிக்கவெரட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொலன்னறுவை - தியபெதும பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்கல்பிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் நேற்று புதன்கிழமை (12) இரவு உயிரிழந்துள்ளதாக தியபெதும பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் கிரித்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.இவர் தனது மகளின் வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ள நிலையில், நேற்றைய தினம் இரவு திக்கல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வயலுக்குச் சென்றிருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவரின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தியபெதும பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.