• Jan 13 2025

அடுத்த வருடம் இரு தேர்தல்கள் - இந்தியாவிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர!

Chithra / Dec 16th 2024, 12:02 pm
image

 

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் வேட்புமனு கோரப்படவுள்ளது.

ஏப்ரல் முதல் பாதியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குறித்த தேர்தல் ஏழு வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றிரவு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரைச் சந்தித்தபோது மாகாண சபைத் தேர்தல் குறித்த  நிலைப்பாட்டை அறிவித்ததுடன் அது நடத்தப்படும் காலப்பகுதியையும் சுட்டிக்காட்டியுள்ளார்..

புதிய அரசியலமைப்பு வரும்வரை தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும்வரை மாகாண சபை முறைமை மாறாதென்றும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

அடுத்த வருடம் இரு தேர்தல்கள் - இந்தியாவிடம் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர  உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்படி ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் வேட்புமனு கோரப்படவுள்ளது.ஏப்ரல் முதல் பாதியில் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அத்துடன் மாகாண சபைத் தேர்தலை செப்டெம்பர் மாதம் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.குறித்த தேர்தல் ஏழு வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டுள்ளது.மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றிரவு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரைச் சந்தித்தபோது மாகாண சபைத் தேர்தல் குறித்த  நிலைப்பாட்டை அறிவித்ததுடன் அது நடத்தப்படும் காலப்பகுதியையும் சுட்டிக்காட்டியுள்ளார்.புதிய அரசியலமைப்பு வரும்வரை தமிழர்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு எட்டப்படும்வரை மாகாண சபை முறைமை மாறாதென்றும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் உறுதியளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement