• Sep 05 2025

எல்ல விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ தயார் நிலையில் இரு ஹெலிகொப்டர்கள்

Chithra / Sep 5th 2025, 10:21 am
image

எல்ல - வெல்லவாய விபத்தில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இரண்டு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. 

நேற்றிரவு எல்ல -வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்குப் பதிலளிக்கும் விதமாகவும், தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும், 

இலங்கை விமானப்படையின் தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஒரு ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் ஒரு MI-17 வானூர்தியும் வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் ஒரு பெல் 412 வானூர்தியும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. 

இந்த விமானங்கள் பலத்த காயமடைந்தவர்களைக் கொழும்புக்கு வானூர்தி மூலம் கொண்டு செல்ல அல்லது தேவையான எந்தவொரு மீட்பு நடவடிக்கையிலும் உதவத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்ல விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவ தயார் நிலையில் இரு ஹெலிகொப்டர்கள் எல்ல - வெல்லவாய விபத்தில் காயமடைந்தவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அழைத்து வருவதற்கு இரண்டு வானூர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. நேற்றிரவு எல்ல -வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்துக்குப் பதிலளிக்கும் விதமாகவும், தேவையான உதவிகளை வழங்குவதற்காகவும், இலங்கை விமானப்படையின் தியத்தலாவ விமானப்படை தளத்தில் ஒரு ரெஜிமென்ட் சிறப்புப் படை மீட்புக் குழுவுடன் ஒரு MI-17 வானூர்தியும் வீரவில விமானப்படை தளத்தில் மருத்துவ பணியாளர்களுடன் ஒரு பெல் 412 வானூர்தியும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் பலத்த காயமடைந்தவர்களைக் கொழும்புக்கு வானூர்தி மூலம் கொண்டு செல்ல அல்லது தேவையான எந்தவொரு மீட்பு நடவடிக்கையிலும் உதவத் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement