• Dec 27 2024

கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் படுகொலை..!

Chithra / Aug 7th 2024, 9:19 am
image

 

மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (06) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை நேற்று பிற்பகல் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் வரகாபொல, நெவ்கல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் படுகொலை.  மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிச்சிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்றிரவு (06) இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் ஏறாவூர், மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.இதேவேளை நேற்று பிற்பகல் ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் வரகாபொல, நெவ்கல பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.இந்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement