யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலினால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.
உயிரிழந்தவர்கள் கொக்குவில் மற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்தவர்களாவர்
இந்நிலையில் கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார். பரிசோதனையின்போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மற்றும் முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவரும் டெங்கு தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக் காலமாக யாழ் மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளமை பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு.samugammedia யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலினால் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளன.உயிரிழந்தவர்கள் கொக்குவில் மற்றும் மல்லாவி பகுதியை சேர்ந்தவர்களாவர்இந்நிலையில் கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த, அரியாலை பகுதியை சேர்ந்த செல்வராசா சிந்துஜன் (வயது 31) எனும் இளைஞனை மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார். பரிசோதனையின்போது அவருக்கு டெங்கு தொற்று இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.மற்றும் முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த ஒருவரும் டெங்கு தீவிரமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அண்மைக் காலமாக யாழ் மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளமை பேரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.