• Nov 23 2024

இரு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து; 18 பயணிகள் வைத்தியசாலைகளில் அனுமதி

Chithra / Oct 11th 2024, 11:26 am
image

 

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று காலை இரண்டு பஸ்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தானது இன்று காலை 08.00 மணியளவில் கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் காயமடைந்த 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பஸ்ஸின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

பாணந்துறையில் இருந்து வந்த பஸ்ஸில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாதமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து; 18 பயணிகள் வைத்தியசாலைகளில் அனுமதி  கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இன்று காலை இரண்டு பஸ்கள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 18 பயணிகள் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தானது இன்று காலை 08.00 மணியளவில் கொழும்பு கண்டி பிரதான வீதியின் உதுவன்கந்த வலகடயாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேருந்துகளே ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.விபத்தில் காயமடைந்த 18 பேர் கேகாலை மற்றும் மாவனெல்ல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.பாணந்துறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் கேகாலையில் இருந்து மாவனல்லை நோக்கி பயணித்த பஸ்ஸின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.பாணந்துறையில் இருந்து வந்த பஸ்ஸில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக சாரதிக்கு பஸ்ஸை கட்டுப்படுத்த முடியாதமையினால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement