• Nov 10 2024

பணத்தை திருடி தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை வாங்கிய இரு மாணவர்கள் கைது

Chithra / Jun 1st 2024, 6:00 pm
image

  

நுவரெலியா - வட்டவளை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி, அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள  வீடொன்றுக்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தைத் திருடியுள்ளனர்.

பின்னர், திருடிய பணத்தைப் பயன்படுத்தி கையடக்கத் தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை, 8 புறாக்கள் மற்றும் 2 மீன் தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை இவர்களிம் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைப்பேசியை 80 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவரும்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர்களிடமிருந்து 12 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

பணத்தை திருடி தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை வாங்கிய இரு மாணவர்கள் கைது   நுவரெலியா - வட்டவளை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.13 வயதுடைய இரண்டு மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி, அவர்களது வீட்டிற்கு அருகில் உள்ள  வீடொன்றுக்குள் நுழைந்து 2 இலட்சம் ரூபா பணத்தைத் திருடியுள்ளனர்.பின்னர், திருடிய பணத்தைப் பயன்படுத்தி கையடக்கத் தொலைப்பேசி, கிரிக்கெட் மட்டை, 8 புறாக்கள் மற்றும் 2 மீன் தொட்டிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இதேவேளை இவர்களிம் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைப்பேசியை 80 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவரும்  கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் சந்தேக நபர்களிடமிருந்து 12 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement