• Jan 15 2025

வெளிநாட்டு பிரஜையின் கையடக்க தொலைபேசியை பறித்த : வட்டவளை இளைஞர்கள் இருவர் கைது

Tharmini / Dec 6th 2024, 10:13 am
image

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற,  உடரட்ட மெனிகே ரயிலில் நேற்றுமுன்தினம் (04) பயணித்த ஸ்பெயின், யுவதியொருவரின்.

5 இலட்சம் ரூபா பெறுமதியான, iphone-ஐ இளைஞர்கள் இருவர் பறித்துள்ளனர்.

தம்மை சிறிய தடியொன்றால் அடித்துவிட்டு கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக குறித்த யுவதி எல்ல சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

நேற்றுமுன்தினம் (04)  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ரொசெல்ல பிரதேசத்தில் இரு இளைஞர்களை சோதனையிட்ட போது, குறித்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வட்டவளை ரொசெல்ல மற்றும் விக்டன் தோட்டங்களை சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யுவதியை வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (05) வரவழைத்த பொலிஸார் குறித்த கையடக்கத் தொலைபேசியை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வெளிநாட்டு பிரஜையின் கையடக்க தொலைபேசியை பறித்த : வட்டவளை இளைஞர்கள் இருவர் கைது கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற,  உடரட்ட மெனிகே ரயிலில் நேற்றுமுன்தினம் (04) பயணித்த ஸ்பெயின், யுவதியொருவரின். 5 இலட்சம் ரூபா பெறுமதியான, iphone-ஐ இளைஞர்கள் இருவர் பறித்துள்ளனர்.தம்மை சிறிய தடியொன்றால் அடித்துவிட்டு கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக குறித்த யுவதி எல்ல சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.நேற்றுமுன்தினம் (04)  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், ரொசெல்ல பிரதேசத்தில் இரு இளைஞர்களை சோதனையிட்ட போது, குறித்த கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வட்டவளை ரொசெல்ல மற்றும் விக்டன் தோட்டங்களை சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இரு சந்தேகநபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யுவதியை வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (05) வரவழைத்த பொலிஸார் குறித்த கையடக்கத் தொலைபேசியை அவரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement