தமது நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அபராதமின்றி வெளியேறுவதற்கு அனுமதிக்கும் பொது மன்னிப்பு காலத்தை ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்பு காலம் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை இரண்டு மாதங்கள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள் அபராதம், வெளியேறல் கட்டணம் அல்லது நுழைவுத் தடைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசா மற்றும் காலாவதியான வதிவிட விசாக்களுடன் தங்கியுள்ளவர்கள், இந்த பொது மன்னிப்புக்காக விண்ணப்பிக்க முடியும் என ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொது மன்னிப்பு காலத்தை அறிவித்தது ஐக்கிய அரபு இராச்சியம் தமது நாட்டில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அபராதமின்றி வெளியேறுவதற்கு அனுமதிக்கும் பொது மன்னிப்பு காலத்தை ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு காலம் இன்று முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை இரண்டு மாதங்கள் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது மன்னிப்புக் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள் அபராதம், வெளியேறல் கட்டணம் அல்லது நுழைவுத் தடைகளுக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசா மற்றும் காலாவதியான வதிவிட விசாக்களுடன் தங்கியுள்ளவர்கள், இந்த பொது மன்னிப்புக்காக விண்ணப்பிக்க முடியும் என ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கம் அறிவித்துள்ளது.