இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர் காலித் அல் அமேரி ஆகியோருக்கு இடையேயான சிறப்பு சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
விமான நிலைய முனையத்தின் மேம்பாட்டிலும் ஐக்கிய அரபு இரச்சியம், முதலீடு செய்யும் என்பதை தூதுவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு இரச்சியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கையின் துறைமுக - விமான சேவை அபிவிருத்திக்கு ஐக்கிய அரபு இராச்சியம் முதலீடு இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் முதலீடு செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் இணக்கம் தெரிவித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதுவர் காலித் அல் அமேரி ஆகியோருக்கு இடையேயான சிறப்பு சந்திப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.விமான நிலைய முனையத்தின் மேம்பாட்டிலும் ஐக்கிய அரபு இரச்சியம், முதலீடு செய்யும் என்பதை தூதுவர் உறுதிப்படுத்தினார்.மேலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த மாத இறுதியில் ஐக்கிய அரபு இரச்சியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.