இலங்கைக்கும் இந்தியாவுக்கிடையில் பாலம் அமைக்கும் யோசனையை கடுமையாக எதிர்ப்பதாக பிவித்ரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் இந்தியாவுக்கிடையில் பாலம் அமைக்கும் யோசனையை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
இந்தியா என்ற நாடு உருவாகும்போது ஏன் இலங்கை இணைக்கப்படவில்லை? இந்தியாவை பிரிட்டன் ஆண்டபோது இந்தியா ஊடாக அல்லாமல் இலங்கையை தனியாக ஆண்டது ஏன்? இலங்கை யென்பது தனிநாடாகவே இருந்து வருகின்றது. கடலால் சூழப்பட்டுள்ள எமது நாட்டுக்கென தேச எல்லை உள்ளது
நாம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறி இருந்தால் மகாபாரதத்தின் ஒரு பாகமாகவே எமது நாடு இருந்திருக்கும்.
தனி நாட்டுக்குரிய கட்டமைப்பை இயற்கை எமக்குப் பரிசாக வழங்கியுள்ளது. எனவே பாலம் அமைத்து இயற்கை வழங்கிய பரிசை நாசமாக்கிவிடக்கூடாது.
எமது நாட்டில் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. மலேரியா இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் அவ்வாறானதொரு சூழ்நிலை இல்லை.
அங்கு சமூகப் பிரச்சினைகளும் உள்ளன.
எனவே, புதிய பிரச்சினைகள் உருவாக இடமளிக்கக்கூடாது. தேசியப் பாதுகாப்பு, சுகாதாரம், சமூகம் உட்படப் பல விடயங்களுக்கு இந்த பாலம் அமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல எனவும் தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கிடையில் பாலம் அமைக்கும் யோசனை; உதய கம்மன்பில எதிர்ப்பு. இலங்கைக்கும் இந்தியாவுக்கிடையில் பாலம் அமைக்கும் யோசனையை கடுமையாக எதிர்ப்பதாக பிவித்ரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கைக்கும் இந்தியாவுக்கிடையில் பாலம் அமைக்கும் யோசனையை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம். இந்தியா என்ற நாடு உருவாகும்போது ஏன் இலங்கை இணைக்கப்படவில்லை இந்தியாவை பிரிட்டன் ஆண்டபோது இந்தியா ஊடாக அல்லாமல் இலங்கையை தனியாக ஆண்டது ஏன் இலங்கை யென்பது தனிநாடாகவே இருந்து வருகின்றது. கடலால் சூழப்பட்டுள்ள எமது நாட்டுக்கென தேச எல்லை உள்ளதுநாம் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறி இருந்தால் மகாபாரதத்தின் ஒரு பாகமாகவே எமது நாடு இருந்திருக்கும். தனி நாட்டுக்குரிய கட்டமைப்பை இயற்கை எமக்குப் பரிசாக வழங்கியுள்ளது. எனவே பாலம் அமைத்து இயற்கை வழங்கிய பரிசை நாசமாக்கிவிடக்கூடாது.எமது நாட்டில் போலியோ ஒழிக்கப்பட்டுள்ளது. மலேரியா இல்லை. ஆனால் தமிழ் நாட்டில் அவ்வாறானதொரு சூழ்நிலை இல்லை. அங்கு சமூகப் பிரச்சினைகளும் உள்ளன. எனவே, புதிய பிரச்சினைகள் உருவாக இடமளிக்கக்கூடாது. தேசியப் பாதுகாப்பு, சுகாதாரம், சமூகம் உட்படப் பல விடயங்களுக்கு இந்த பாலம் அமைக்கும் யோசனை ஏற்புடையது அல்ல எனவும் தெரிவித்தார்.