• Sep 20 2024

அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி - நடிப்புக்கு குட்பாய்?

Chithra / Dec 14th 2022, 12:58 pm
image

Advertisement

தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இன்று பதவியேற்றார்.

அவர் பதவியேற்றதன் மூலம் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.

காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதுவரை சிவா வி மெய்யநாதன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சு பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.

"நான் அதை ஒரு பதவியாக கருதாமல் பொறுப்புடன் செயல்படுவேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

திமுகவின் வம்ச அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

எனினும், எவ்வித விமர்சனங்கள் வந்தாலும், அவற்றுக்கு செயற்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் உதயநிதி தெரிவித்துள்ளார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார்.

44வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உண்டு.

2021 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, ஜூலை மாதம் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார்.

இந்த அணி முதலில் 1968 இல் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது, மேலும் அவர் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக அதன் செயலாளராக இருந்தார்.

இளைஞர் பிரிவின் தலைமையில், மருத்துவ சேர்க்கைக்கான நீட், குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் இந்தி மொழி திணிப்பு, என்பவற்றுக்கு எதிரான போராட்டங்களை உதயநிதி வழிநடத்தினார்.

இதேவேளை, 2008 ஆம் ஆண்டில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இறங்கினார். அத்துடன், சுமார் 15 படங்களில் அவர் நடிததுள்ளார்.

இந்த நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த உதயநிதி, இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என்றும் இதன்பிறகு முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி - நடிப்புக்கு குட்பாய் தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தை மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இன்று பதவியேற்றார்.அவர் பதவியேற்றதன் மூலம் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.காலை 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உதயநிதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இதுவரை சிவா வி மெய்யநாதன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சு பொறுப்பு உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது."நான் அதை ஒரு பதவியாக கருதாமல் பொறுப்புடன் செயல்படுவேன்" என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.திமுகவின் வம்ச அரசியலுக்கு எதிராக எதிர்க்கட்சியான அதிமுகவும், பாஜகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.எனினும், எவ்வித விமர்சனங்கள் வந்தாலும், அவற்றுக்கு செயற்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன் உதயநிதி தெரிவித்துள்ளார்.2021 சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் போட்டியிட்டு உதயநிதி வெற்றிபெற்றார்.44வது செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டதில் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பங்கு உண்டு.2021 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, ஜூலை மாதம் அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி நியமிக்கப்பட்டார்.இந்த அணி முதலில் 1968 இல் ஸ்டாலினால் தொடங்கப்பட்டது, மேலும் அவர் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களாக அதன் செயலாளராக இருந்தார்.இளைஞர் பிரிவின் தலைமையில், மருத்துவ சேர்க்கைக்கான நீட், குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் இந்தி மொழி திணிப்பு, என்பவற்றுக்கு எதிரான போராட்டங்களை உதயநிதி வழிநடத்தினார்.இதேவேளை, 2008 ஆம் ஆண்டில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற தனது நிறுவனத்தின் மூலம் திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் இறங்கினார். அத்துடன், சுமார் 15 படங்களில் அவர் நடிததுள்ளார்.இந்த நிலையில், இன்று அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த உதயநிதி, இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் தான் தனது கடைசிப் படம் என்றும் இதன்பிறகு முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement