• Nov 26 2024

இலங்கைக்கான பயண ஆலோசனைகள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு

UK
Chithra / Mar 29th 2024, 1:34 pm
image

  

இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.  

அதேநேரம், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கைக்கான பயண ஆலோசனைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும், 

தொடர்ந்து பரிசீலிப்பதாகவும் பிரித்தானிய பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், அஹ்மத் விம்ளின்டன் பிரபு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பாரிய பங்காற்றுவதாக நேஸ்பி பிரபு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கைக்கான பயண ஆலோசனைகள், தேசிய பாதுகாப்பையும் பிரித்தானிய பிரஜைகளின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு தயாரிக்கப்படுவதாக அஹ்மத் விம்ளின்டன் பிரபு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் மற்றும் இலங்கையிலுள்ள சில உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறும் தகவல்களை பரிசீலித்ததன் பின்னர் பயண ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான பயண ஆலோசனைகள் தொடர்பில் பிரித்தானியாவின் அறிவிப்பு   இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.  அதேநேரம், தற்போது நடைமுறையில் உள்ள இலங்கைக்கான பயண ஆலோசனைகளை உன்னிப்பாக அவதானிப்பதாகவும், தொடர்ந்து பரிசீலிப்பதாகவும் பிரித்தானிய பொதுநலவாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், அஹ்மத் விம்ளின்டன் பிரபு தெரிவித்துள்ளார்.இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை பாரிய பங்காற்றுவதாக நேஸ்பி பிரபு பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.இதனடிப்படையில் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை பிரித்தானியா புதுப்பிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.இந்த நிலையில், இலங்கைக்கான பயண ஆலோசனைகள், தேசிய பாதுகாப்பையும் பிரித்தானிய பிரஜைகளின் பாதுகாப்பை முதன்மையாக கொண்டு தயாரிக்கப்படுவதாக அஹ்மத் விம்ளின்டன் பிரபு தெரிவித்துள்ளார்.இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் மற்றும் இலங்கையிலுள்ள சில உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து கிடைக்கப் பெறும் தகவல்களை பரிசீலித்ததன் பின்னர் பயண ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement