• Sep 22 2024

பிரான்சில் பாதாள உலகக்குழு உறுப்பினர் குடு அஞ்சு விடுதலை...!samugammedia

Anaath / Oct 27th 2023, 10:47 am
image

Advertisement

பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் தேடப்பட்டு வதுள்ள நிலையில்  நாட்டில் இருந்து தப்பிச்சென்ற குடு அஞ்சு, கடந்த ஏப்ரல் மாதம் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் குழுவை நடத்தி வந்த குடு அஞ்சுவை கைது செய்ய சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் சிவப்பு அறிவிப்பை அனுப்பியிருந்தது.

இதேவேளை குடு அஞ்சு எனப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வாவின் விடுதலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நான்கு பேரை கல்கிசை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

மேலும், குறித்த நால்வரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.


பிரான்சில் பாதாள உலகக்குழு உறுப்பினர் குடு அஞ்சு விடுதலை.samugammedia பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான குடு அஞ்சு என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை - கல்கிசை மாநகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வாவின் கொலை, பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் தேடப்பட்டு வதுள்ள நிலையில்  நாட்டில் இருந்து தப்பிச்சென்ற குடு அஞ்சு, கடந்த ஏப்ரல் மாதம் பிரான்சில் கைது செய்யப்பட்டார்.வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் குழுவை நடத்தி வந்த குடு அஞ்சுவை கைது செய்ய சர்வதேச காவல்துறையான இன்டர்போலும் சிவப்பு அறிவிப்பை அனுப்பியிருந்தது.இதேவேளை குடு அஞ்சு எனப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வாவின் விடுதலையைக் கொண்டாடியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நான்கு பேரை கல்கிசை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.மேலும், குறித்த நால்வரையும் எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement