• Nov 25 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை...! 29000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு...!

Sharmi / May 23rd 2024, 9:15 pm
image

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 24 மணித்தியாலங்களில் மொத்தமாக 7323 குடும்பங்கள் உட்பட 29228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 இவர்களில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் 164 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அத்துடன் 554 குடும்பங்கள் உட்பட 1852 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வடமேல் மாகாணத்திலேயே  அதிக பாதிப்புக்கள்  இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில்  ,வெள்ளப்பெருக்கு, காற்றழுத்தம் ஆகியவை காரணமாக 6261 குடும்பங்கள் உட்பட 25678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 537 குடும்பங்கள் உட்பட 1775 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை மேல் மாகாணத்தில்  516 குடும்பங்கள் உட்பட 2175 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 45 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 17 வீடுகள் உட்பட 77 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வெள்ளப்பெருக்கினால் 347 குடும்பங்கள் உட்பட 1491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9  குடும்பங்களை சேர்ந்த  52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய மாழை,  வெள்ளப்பெருக்கினால் 133 குடும்பங்கள் உட்பட 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதே வேளை  களுத்துறை மாவட்டத்தில் இடிமின்னல், காற்றழுத்தம் ஆகியவை காரணமாக  36 குடும்பங்களை சேர்ந்துள்ள 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 36 வீடுக பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 8 பேர் உட்பட 25 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை வடமாகாணத்தில்  433 குடும்பங்கள் உட்பட 948 பேர் காலநிலை அனர்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் 

அதனடிப்படையில் கிளிநொச்சியில் அதிகூடிய வெப்பநிலை காரணமாக 432 குடும்பங்கள் உட்பட 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ் மாவட்டத்தில் ஒரு குடும்பம்  உட்பட இருவர் காற்றழுத்தம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை தென் மாகாணத்தில் 85 குடும்பங்கள் உட்பட 327  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் அதிகூடிய மழை , காற்றழுத்தம், மரங்கள் முறிந்து விழுந்தமை , மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 49 குடும்பங்கள் உட்பட 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

மாத்தறை  மாவட்டத்தில்அதிகூடிய மழை, மற்றும் காற்றழுத்தத்தினால்  36 குடும்பங்களை சேர்ந்துள்ள 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதே வேளை சப்பிரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் காற்றழுத்தம் , மழை, மரங்கள் முறிந்து விழுதல் போன்ற காரணங்களினால்  28 குடும்பங்கள் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை. 29000 இற்கும் அதிகமானோர் பாதிப்பு. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 24 மணித்தியாலங்களில் மொத்தமாக 7323 குடும்பங்கள் உட்பட 29228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களில் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் 164 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அத்துடன் 554 குடும்பங்கள் உட்பட 1852 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வடமேல் மாகாணத்திலேயே  அதிக பாதிப்புக்கள்  இடம்பெற்றுள்ளது.அந்த வகையில் வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில்  ,வெள்ளப்பெருக்கு, காற்றழுத்தம் ஆகியவை காரணமாக 6261 குடும்பங்கள் உட்பட 25678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 10 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 537 குடும்பங்கள் உட்பட 1775 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதே வேளை மேல் மாகாணத்தில்  516 குடும்பங்கள் உட்பட 2175 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 45 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 17 வீடுகள் உட்பட 77 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கொழும்பில் வெள்ளப்பெருக்கினால் 347 குடும்பங்கள் உட்பட 1491 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9  குடும்பங்களை சேர்ந்த  52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கம்பஹா மாவட்டத்தில் அதிகூடிய மாழை,  வெள்ளப்பெருக்கினால் 133 குடும்பங்கள் உட்பட 561 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இதே வேளை  களுத்துறை மாவட்டத்தில் இடிமின்னல், காற்றழுத்தம் ஆகியவை காரணமாக  36 குடும்பங்களை சேர்ந்துள்ள 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 36 வீடுக பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 8 பேர் உட்பட 25 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதே வேளை வடமாகாணத்தில்  433 குடும்பங்கள் உட்பட 948 பேர் காலநிலை அனர்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதனடிப்படையில் கிளிநொச்சியில் அதிகூடிய வெப்பநிலை காரணமாக 432 குடும்பங்கள் உட்பட 946 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் யாழ் மாவட்டத்தில் ஒரு குடும்பம்  உட்பட இருவர் காற்றழுத்தம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை தென் மாகாணத்தில் 85 குடும்பங்கள் உட்பட 327  பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 82 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் அதிகூடிய மழை , காற்றழுத்தம், மரங்கள் முறிந்து விழுந்தமை , மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 49 குடும்பங்கள் உட்பட 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 46 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மாத்தறை  மாவட்டத்தில்அதிகூடிய மழை, மற்றும் காற்றழுத்தத்தினால்  36 குடும்பங்களை சேர்ந்துள்ள 141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இதே வேளை சப்பிரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் காற்றழுத்தம் , மழை, மரங்கள் முறிந்து விழுதல் போன்ற காரணங்களினால்  28 குடும்பங்கள் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement