• Jul 24 2025

அக்குறணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி!

Chithra / Jun 12th 2025, 1:04 pm
image

 

அக்குறணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆட்சியமைக்கவுள்ளது.

அதன்படி, இன்று (12) நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நடைபெற்ற வாக்கு பதிவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இல் அதிகூடிய 16 ஆசனங்களின் வாக்கு பதிவை அவர் பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் தாரிக் அலி 13 வாக்குகளைப் பெற்றார்.

இதற்கிடையில் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப் பெற்று துணைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதேநேரத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

அக்குறணை பிரதேச சபையின் அதிகாரத்தை கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சக்தி  அக்குறணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்று ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஆட்சியமைக்கவுள்ளது.அதன்படி, இன்று (12) நடைபெற்ற அக்குறணை பிரதேச சபையின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று தவிசாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.நடைபெற்ற வாக்கு பதிவில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 இல் அதிகூடிய 16 ஆசனங்களின் வாக்கு பதிவை அவர் பெற்றார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் தாரிக் அலி 13 வாக்குகளைப் பெற்றார்.இதற்கிடையில் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப் பெற்று துணைத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதேநேரத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now