• Nov 19 2024

வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் - ஜனாதிபதி பணிப்புரை

Chithra / Aug 29th 2024, 7:52 am
image

 

கொழும்பில் தங்கியிருக்காது ஊர்களுக்குச் சென்று வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு கம்பஹா மாவட்டமும், கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கு காலி மாவட்டமும், தேசிய அமைப்பாளர் சாகல ரட்நாயக்கவிற்கு கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டமும், 

உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு குருணாகல் மாவட்டமும், தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மாவட்டமும் வடக்கு மாகாணமும், பொருளாளர் பீரே ஷருக்கிற்கு மாவனல்ல பகுதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சிறிஸாந்த டியுடர், தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டததரணி டொனால்ட் பெரேரா ஆகியோர் கட்சித் தலைமையகத்திலிருந்து மாவட்ட இணைப்பு பணிகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் - ஜனாதிபதி பணிப்புரை  கொழும்பில் தங்கியிருக்காது ஊர்களுக்குச் சென்று வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தனவிற்கு கம்பஹா மாவட்டமும், கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கு காலி மாவட்டமும், தேசிய அமைப்பாளர் சாகல ரட்நாயக்கவிற்கு கொழும்பு மற்றும் மாத்தறை மாவட்டமும், உப தலைவர் அகில விராஜ் காரியவசத்திற்கு குருணாகல் மாவட்டமும், தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்கவிற்கு கொழும்பு மாவட்டமும் வடக்கு மாகாணமும், பொருளாளர் பீரே ஷருக்கிற்கு மாவனல்ல பகுதியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் சிறிஸாந்த டியுடர், தேர்தல் செயற்பாட்டு பிரதானி சட்டததரணி டொனால்ட் பெரேரா ஆகியோர் கட்சித் தலைமையகத்திலிருந்து மாவட்ட இணைப்பு பணிகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.இதேவேளை, கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நோய் வாய்ப்பட்டிருப்பதாகவும் இதனால் அவர் அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement