• Jan 22 2025

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்து எதிர்கொள்ள ஐ.தே.க திட்டம்..!

Sharmi / Dec 23rd 2024, 1:53 pm
image

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முற்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதான அரசியற் கட்சிகள் தேர்தலுக்கான தயார் படுத்தலை ஆரம்பித்துள்ளன.

அந்தவகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை யானை சின்னத்தின் கீழ் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. 

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்குரிய ஆரம்ப கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பின் பச்சைக் கொடி காட்ட மறுப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமான திசையை நோக்கி நகரவில்லை என கூறப்படுகின்றது.

எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலை யானை சின்னத்தின் கீழ் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதுடன், தேர்தலுக்கு முன்னதாக கட்சியை மறுசீரமைப்புக்கான ஆரம்பக்கட்ட திட்டங்கள் வெளியிடக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்து எதிர்கொள்ள ஐ.தே.க திட்டம். எதிர்வரும் 2025ஆம் ஆண்டு முற்பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதான அரசியற் கட்சிகள் தேர்தலுக்கான தயார் படுத்தலை ஆரம்பித்துள்ளன.அந்தவகையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை யானை சின்னத்தின் கீழ் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசிய கட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைப்பதற்குரிய ஆரம்ப கட்ட செயற்பாடுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித்துக்கு வழங்குவதற்கு கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தரப்பின் பச்சைக் கொடி காட்ட மறுப்பதால் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைவு சாத்தியமான திசையை நோக்கி நகரவில்லை என கூறப்படுகின்றது.எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தலை யானை சின்னத்தின் கீழ் எதிர்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளதுடன், தேர்தலுக்கு முன்னதாக கட்சியை மறுசீரமைப்புக்கான ஆரம்பக்கட்ட திட்டங்கள் வெளியிடக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement