• May 09 2024

இலங்கையின் பாரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும்..! பட்டியலிட்ட அமைப்புக்கள் samugammedia

Chithra / Jun 23rd 2023, 10:04 am
image

Advertisement

30 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டும், 20 இடங்களில் அகழ்வுப் பணிகளுக்கு முயற்சி செய்தும், ஒருசில சடலங்களே அடையாளம் காணப்பட்டு, உரிய குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன என  காணாமல்ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அமைப்பைச் சேர்ந்த பிறிற்ரோ பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய தினம் வெளியிடப்படட புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளில் இடம்பெற்ற திட்டமிட்ட தவறுகளின் மாதிரிகளை விளக்கமாகக் கூறும் அறிக்கையிலே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கைத்தீவு முழுவதிலும், ஆழமற்ற புதைகுழிகளில் பல்லாயிரக் கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். 

அதனால் அகழ்வுப் பணிகளில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படாத மோசமான நிலைமையை வெறுமனே துரதிஸ்டம் என்று வர்ணித்துவிட முடியாது.

இதற்குக் காரணம் அரசியல் விரும்பமின்மையே என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இலங்கையில் உள்ள பாரிய மனிதப் புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும் 1 என்னும் அறிக்கையானது அரசாங்கம் திட்டமிட்டு விசாரணைகளில் மேற்கொள்ளும் தலையீடுகளை துல்லியமாக விளக்குகின்றது. 

தீர்க்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் உலகில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பதாக ஐ.நா. பட்டியலிட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் உண்மையைக் கண்டறிவதற்காக எவ்வளவு காலமாக துன்பப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விளக்கும், 'இலங்கையின் பாரிய புதைகுழிகள் பற்றிய உண்மையைத் தேடல்' என்னும் 30 நிமிட ஆவணப் படமும் இந்நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.

இலங்கையில் காணாமல் போதல்களுக்கும் புதைகுழிகளுக்கும் இடையேயான தொடர்பினை, பாதிக்கப்பட்ட குடும்பங்களதும் அவர்களது அன்புக்குரியவர்களதும் கதைகள் உள்ளிட்ட, பல்வேறு கதைகளில் கவனம் செலுத்தி, இந்த ஆவணப்படம் ஆராய்கின்றது.

2013இல் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலிருந்த புதைகுழியிலிருந்து 155 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டதையடுத்து, மாத்தளையிலிருந்து எண்பதுகளின் இறுதிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், தங்களது பாரிய புதைகுழி வழக்கினை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிசெய்யுமாறு கேட்டதைத் தொடர்ந்தே இக்கூட்டறிக்கை வெளிவருகின்றது.

நூற்றுக்கணக்கானவர்கள் மாத்தளை மாவட்டத்தில் காணாமல்போன 1989ஆம் ஆண்டில், அப்பிரதேச்திற்கான படைத்துறை ஒருங்கிணைப்பாளராக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே பதவி வகித்திருந்தார்.

பின்னர் நடந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று சந்தேகக் குற்றவாளியாக இவரைக் கூறியிருந்தது.

கோட்டாபயவையும், இக்குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட இதர குற்றவாளிகளையும் விசாரணை செய்து அவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையென, ஐ.நா. நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு இவ்வாண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியது, ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் பாரிய மனித புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும். பட்டியலிட்ட அமைப்புக்கள் samugammedia 30 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டும், 20 இடங்களில் அகழ்வுப் பணிகளுக்கு முயற்சி செய்தும், ஒருசில சடலங்களே அடையாளம் காணப்பட்டு, உரிய குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டன என  காணாமல்ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் அமைப்பைச் சேர்ந்த பிறிற்ரோ பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.நேற்றைய தினம் வெளியிடப்படட புதைகுழிகளின் அகழ்வுப் பணிகளில் இடம்பெற்ற திட்டமிட்ட தவறுகளின் மாதிரிகளை விளக்கமாகக் கூறும் அறிக்கையிலே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில், இலங்கைத்தீவு முழுவதிலும், ஆழமற்ற புதைகுழிகளில் பல்லாயிரக் கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். அதனால் அகழ்வுப் பணிகளில் பெரியளவில் முன்னேற்றம் ஏற்படாத மோசமான நிலைமையை வெறுமனே துரதிஸ்டம் என்று வர்ணித்துவிட முடியாது.இதற்குக் காரணம் அரசியல் விரும்பமின்மையே என்பது தெளிவாகத் தெரிகின்றது.இலங்கையில் உள்ள பாரிய மனிதப் புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுப் பணிகளும் 1 என்னும் அறிக்கையானது அரசாங்கம் திட்டமிட்டு விசாரணைகளில் மேற்கொள்ளும் தலையீடுகளை துல்லியமாக விளக்குகின்றது. தீர்க்கப்படாத வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகளை அதிகமாகக் கொண்ட நாடுகளில் உலகில் இரண்டாவது இடத்தில் இலங்கை இருப்பதாக ஐ.நா. பட்டியலிட்டுள்ளது.காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பங்கள் உண்மையைக் கண்டறிவதற்காக எவ்வளவு காலமாக துன்பப்பட்டிருக்கின்றார்கள் என்பதை விளக்கும், 'இலங்கையின் பாரிய புதைகுழிகள் பற்றிய உண்மையைத் தேடல்' என்னும் 30 நிமிட ஆவணப் படமும் இந்நிகழ்வில் காண்பிக்கப்பட்டது.இலங்கையில் காணாமல் போதல்களுக்கும் புதைகுழிகளுக்கும் இடையேயான தொடர்பினை, பாதிக்கப்பட்ட குடும்பங்களதும் அவர்களது அன்புக்குரியவர்களதும் கதைகள் உள்ளிட்ட, பல்வேறு கதைகளில் கவனம் செலுத்தி, இந்த ஆவணப்படம் ஆராய்கின்றது.2013இல் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலிருந்த புதைகுழியிலிருந்து 155 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டதையடுத்து, மாத்தளையிலிருந்து எண்பதுகளின் இறுதிப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், தங்களது பாரிய புதைகுழி வழக்கினை முன்னெடுத்துச் செல்வதற்கு உதவிசெய்யுமாறு கேட்டதைத் தொடர்ந்தே இக்கூட்டறிக்கை வெளிவருகின்றது.நூற்றுக்கணக்கானவர்கள் மாத்தளை மாவட்டத்தில் காணாமல்போன 1989ஆம் ஆண்டில், அப்பிரதேச்திற்கான படைத்துறை ஒருங்கிணைப்பாளராக சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே பதவி வகித்திருந்தார்.பின்னர் நடந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று சந்தேகக் குற்றவாளியாக இவரைக் கூறியிருந்தது.கோட்டாபயவையும், இக்குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட இதர குற்றவாளிகளையும் விசாரணை செய்து அவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எவையென, ஐ.நா. நிபுணர்களைக் கொண்ட ஒரு குழு இவ்வாண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றினை எழுதியது, ஆனால் அதற்குப் பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement