• Nov 23 2024

தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி சாதனை..!

Sharmi / Oct 1st 2024, 8:14 pm
image

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் நேற்றையதினம்(30) குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளது.

இப் போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணப் பாடசாலையான இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி வெள்ளி பதக்கத்தை சுவீகரித்துள்ளது. 

இதில் ஆண்கள் பிரிவில் பங்குபற்றி ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இலங்கையில் விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற பாடசாலைகளில் முன்னணியில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற ஊர்காவற்றுறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் பாடசாலை தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளது. 

இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி சாதனை. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட உடற்பயிற்சி போட்டிகள் நேற்றையதினம்(30) குருநாகல் மலியதேவ பெண்கள் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளது. இப் போட்டியில் பங்கேற்ற வடக்கு மாகாணப் பாடசாலையான இளவாலை ஹென்றி அரசர் கல்லூரி அணி வெள்ளி பதக்கத்தை சுவீகரித்துள்ளது. இதில் ஆண்கள் பிரிவில் பங்குபற்றி ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி தேசிய மட்ட உடற்பயிற்சிப் போட்டியில் இதுவரை பங்கேற்ற போட்டிகளில் 5 தங்கப் பதக்கம், 5 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இலங்கையில் விளையாட்டில் அதிக பதக்கம் வென்ற பாடசாலைகளில் முன்னணியில் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை தேசியமட்ட உடற்பயிற்சி போட்டியில் பெண்கள் பிரிவில் பங்கேற்ற ஊர்காவற்றுறை கரம்பொன் சிறிய புஸ்பம் மகளிர் பாடசாலை தேசிய மட்டத்தில் 3 ஆம் இடத்தினை பெற்று வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளது. இந்நிலையில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement