• Jan 05 2025

மனோ கணேசனை திடீரென சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்!

Chithra / Jan 3rd 2025, 11:58 am
image

 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. 

இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு, மலையக பெருந்தோட்ட காணி உரிமை,

சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலைப்புகளின் கீழ் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.



மனோ கணேசனை திடீரென சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இனப்பிரச்சினை தீர்வுக்கான நகர்வு, அதிகார பகிர்வு, மலையக பெருந்தோட்ட காணி உரிமை,சட்டத்தின் ஆட்சி, பொருளாதார சவால்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய தலைப்புகளின் கீழ் இதன்போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement