• Nov 24 2024

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு - வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பங்குச் சந்தை!

Tamil nila / Nov 10th 2024, 7:04 pm
image

டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமெரிக்க டொலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதாகவும், பங்குச் சந்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சுமார் 04 மாதங்களின் பின்னர் டொலர் அதன் அதிகபட்ச மதிப்பை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் 04 ஆண்டுகளுக்குப் பிறகு, யூரோ டொலருக்கு எதிராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

 ஜப்பானிலிருந்து யூரோ மற்றும் சீன யுவான் மதிப்புகளும் சரிந்துள்ளன. 

 டொலரின் மதிப்பு ஸ்திரத்தன்மையால் தங்கத்தின் விலையும் ஓரளவு குறைந்துள்ளது. 

 தங்கத்தின் விலை சுமார் 130 டொலர்கள் வரை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க பங்குச் சந்தை ஒரே இரவில் 2.5% உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு - வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த பங்குச் சந்தை டொனால்ட் ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அமெரிக்க டொலரின் மதிப்பு வலுப்பெற்றுள்ளதாகவும், பங்குச் சந்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 04 மாதங்களின் பின்னர் டொலர் அதன் அதிகபட்ச மதிப்பை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 04 ஆண்டுகளுக்குப் பிறகு, யூரோ டொலருக்கு எதிராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  ஜப்பானிலிருந்து யூரோ மற்றும் சீன யுவான் மதிப்புகளும் சரிந்துள்ளன.  டொலரின் மதிப்பு ஸ்திரத்தன்மையால் தங்கத்தின் விலையும் ஓரளவு குறைந்துள்ளது.  தங்கத்தின் விலை சுமார் 130 டொலர்கள் வரை குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க பங்குச் சந்தை ஒரே இரவில் 2.5% உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement