• Apr 03 2025

அமெரிக்க தேர்தல் : இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி!

Tamil nila / Nov 6th 2024, 9:16 pm
image

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை நிறைவுபெற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா, கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்

தற்போது விர்ஜீனியா மாகாண செனட்டராக பதவி வகித்து வரும் அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார்.

இதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா,பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

அமெரிக்க தேர்தல் : இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் வெற்றி அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை நிறைவுபெற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 277 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்டு டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ளார்.அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா, கிழக்கு கடற்கரையில் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி உறுப்பினர் என்ற பெருமையை பெற்றுள்ளார்தற்போது விர்ஜீனியா மாகாண செனட்டராக பதவி வகித்து வரும் அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் மைக் கிளான்சியை தோற்கடித்துள்ளார்.இதே போல், ஏற்கனவே மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களாக பதவி வகித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீ தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா,பிரமிலா ஜெயபால் மற்றும் அமி பேரா ஆகிய 5 பேரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று தங்கள் பதவியை தக்கவைத்துக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now