• Nov 25 2024

வடக்கு கிழக்கில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை...!

Sharmi / Mar 15th 2024, 2:35 pm
image

வடக்கு கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு,  உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சோனெக் இ. சொனெக் தெரிவித்துள்ளார்.

யாழிற்கு இன்றையதினம்(15)  விஜயம் மேற்கொண்ட நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று(15)  யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளோம். 

இந்நிலையில்,  இங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இளைஞர்- யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தினர். 

இவ்வாறான விடயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதற்கேற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கை. வடக்கு கிழக்கில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதோடு,  உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை அதிகரிக்க அமெரிக்கா நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சோனெக் இ. சொனெக் தெரிவித்துள்ளார்.யாழிற்கு இன்றையதினம்(15)  விஜயம் மேற்கொண்ட நிலையில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நாம் விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று(15)  யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளோம். இந்நிலையில்,  இங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியதன் பிரகாரம் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால் தாம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.இளைஞர்- யுவதிகள் வேலைவாய்ப்பு இன்றி பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தினர். இவ்வாறான விடயங்களை நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அதற்கேற்ப பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement