• Nov 25 2024

சுற்றுலா இல்லங்களை பயன்படுத்தும் முறை; அரசியல்வாதிகளுக்கு விதிக்கப்படும் தடை! அநுர அரசு அதிரடி

Chithra / Oct 23rd 2024, 10:05 am
image

 

இலங்கையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான தங்குமிட விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களினால் நடத்தப்படும் உல்லாச விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை குறைந்த விலையில் ஏனையவர்களுக்கு அமைச்சர்கள் வழங்கும் நடைமுறை மாற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் எந்தவொரு இலங்கையர்களும் இந்த விடுமுறை விடுதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முறையை பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 09 சுற்றுலா இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதற்காக 166.93 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வேலைத்திட்டங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என  தெரிவித்துள்ளார்.


சுற்றுலா இல்லங்களை பயன்படுத்தும் முறை; அரசியல்வாதிகளுக்கு விதிக்கப்படும் தடை அநுர அரசு அதிரடி  இலங்கையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான தங்குமிட விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களினால் நடத்தப்படும் உல்லாச விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை குறைந்த விலையில் ஏனையவர்களுக்கு அமைச்சர்கள் வழங்கும் நடைமுறை மாற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.நாட்டில் எந்தவொரு இலங்கையர்களும் இந்த விடுமுறை விடுதிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முறையை பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 09 சுற்றுலா இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அதற்காக 166.93 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வேலைத்திட்டங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என  தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement