• May 13 2024

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்: சிறைச்சாலைக்கு சென்று விசாரணை செய்த யாழ்.நீதவான்..! samugammedia

Chithra / Nov 22nd 2023, 11:13 am
image

Advertisement

 

வட்டுக்கோட்டை இளைஞன்  மரணம் தொடர்பில் யாழ். நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 

இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம்(24)  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அலெக்ஸ் எனும் இளைஞனர் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. 

இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் திங்கட்கிழமை (20) மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் மேற்கொண்ட போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். 

தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகஸ்தர்கள், உள்ளிட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டார். 

உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணி ரிஷிகேஷவன், மற்றும் சட்டத்தரணி மயூரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம்: சிறைச்சாலைக்கு சென்று விசாரணை செய்த யாழ்.நீதவான். samugammedia  வட்டுக்கோட்டை இளைஞன்  மரணம் தொடர்பில் யாழ். நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார். இதேவேளை உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடமும் வாக்கு மூலம் பெற்றுக்கொள்வதற்காக நாளை மறுதினம்(24)  நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட அலெக்ஸ் எனும் இளைஞனர் கடந்த ஞாயிற்றுக் கிழமை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இளைஞனின் உயிரிழப்பு தொடர்பிலான விசாரணைகள் யாழ்.நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெற்று வருகின்றன. இளைஞனின் உடற்கூற்று பரிசோதனைகள் திங்கட்கிழமை (20) மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் மேற்கொண்ட போது, நீதவான் வைத்தியசாலைக்கு நேரில் சென்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைச்சாலை அத்தியட்சகர், உத்தியோகஸ்தர்கள், உள்ளிட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும் பெற்றுக்கொண்டார். உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணி ரிஷிகேஷவன், மற்றும் சட்டத்தரணி மயூரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement