• Nov 25 2024

வலி.வடக்கில் பொது மக்களிடம் காணிகள் கையளிப்பு..!

Tharun / Mar 12th 2024, 8:53 pm
image

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.


தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் குறித்த காணிகளை  பார்வையிட்டு அவற்றை பொதுமக்களிடம் கையளித்தனர்.


J/235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், J/240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது.


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


அத்துடன் J/241  கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.


அந்த காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் பழைய வீடுகளின் கதவு, நிலை உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொண்டு தருமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள்  கேட்டுக் கொண்டனர்.

வலி.வடக்கில் பொது மக்களிடம் காணிகள் கையளிப்பு. யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் குறித்த காணிகளை  பார்வையிட்டு அவற்றை பொதுமக்களிடம் கையளித்தனர்.J/235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், J/240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.அத்துடன் J/241  கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார்.அந்த காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் பழைய வீடுகளின் கதவு, நிலை உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொண்டு தருமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள்  கேட்டுக் கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement