• Apr 26 2025

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி விவசாயி பலி!

Chithra / Apr 26th 2025, 10:12 am
image

 

பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது  மின்னல் தாக்கி நேற்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இந்த நபர் வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், 

மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

சடலம் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி விவசாயி பலி  பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தபோது  மின்னல் தாக்கி நேற்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.உயிரிழந்தவர் 63 வயதுடைய அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.இந்த நபர் வேறொரு நபருடன் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்ததாகவும், மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.சடலம் பொலன்னறுவை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement