யாழ்ப்பாணம் கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை இன்றையதினம் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
இந்த கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த விஜயத்தில், நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இக்கட்டிடத்தை சமூக மற்றும் அபிவிருத்தி நோக்கில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விரைவில் திட்டமிடல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கீரிமலை ஜனாதிபதி மாளிகைக்கு அமைச்சர்கள் திடீர் விஜயம் யாழ்ப்பாணம் கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை இன்றையதினம் அமைச்சர்கள் பார்வையிட்டனர்.இந்த கட்டிடத்தின் எதிர்கால பயன்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையாக விரிவான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது.இந்த விஜயத்தில், நகர அபிவிருத்தி, கட்டுமான மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாணம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் உயர் செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.இக்கட்டிடத்தை சமூக மற்றும் அபிவிருத்தி நோக்கில் மக்களுக்கு பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவது குறித்து பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டு, விரைவில் திட்டமிடல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.