• Apr 29 2025

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான திகதியை அறிவித்த வத்திக்கான்

Thansita / Apr 28th 2025, 10:05 pm
image

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பின்னர் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு  (Conclave)  நடைபெறும் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த மாநாடு மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான்  அறிவித்துள்ளது.

இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவர்களில் 53 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், 23 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், 20 பேர் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், 18 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், 17 பேர் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர். 

பாப்பரசர் தேர்தலுக்கு வரும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். 

வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, பூமியில் மிகவும் இரகசியமான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. 

இரகசியமான வாக்கெடுப்பாக நடைபெறும் இந்த பாப்பரசர் தேர்தலுக்காக இன்று முதல் சிஸ்டைன் தேவாலயம் மூடப்பட்டுள்ளது. 

சிவப்பு உடையில் அலங்கரிக்கப்பட்டு வாக்களிக்க வரும் கர்தினால்களின் வாக்குச் சீட்டுகள், பாப்பரசரை தேர்ந்தெடுத்த பின்னர் எரித்து அழிக்கப்படுவது மரபாகும். 

வாக்கெடுப்பு முடிந்த பின்னர், வாக்குச் சீட்டுகளை எரிப்பதால் வெளிப்படும் புகையின் மூலமே பாப்பரசர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெளி உலகத்திற்கு தெரிவிக்கப்படும் அதன்படி, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைக்கூண்டிலிருந்து வெள்ளை புகை வெளியேறினால்,

கர்தினால்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று புதிய பாப்பரசர்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது 


புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான திகதியை அறிவித்த வத்திக்கான் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு பின்னர் புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு  (Conclave)  நடைபெறும் உத்தியோகபூர்வ திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, குறித்த மாநாடு மே 7 ஆம் திகதி நடைபெறும் என்று வத்திக்கான்  அறிவித்துள்ளது.இதேவேளை இந்த ஆண்டு பாப்பரசர் தேர்தலுக்கு 135 கார்டினல்கள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.அவர்களில் 53 கர்தினால்கள் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள், 23 பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள், 20 பேர் வட அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், 18 பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள், 17 பேர் தென் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஓசியானியாவைச் சேர்ந்த 4 பேர் தகுதி பெற்றுள்ளனர். பாப்பரசர் தேர்தலுக்கு வரும் கர்தினால்கள் 80 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெறும் இந்த வாக்கெடுப்பு, பூமியில் மிகவும் இரகசியமான வாக்கெடுப்பாக கருதப்படுகிறது. இரகசியமான வாக்கெடுப்பாக நடைபெறும் இந்த பாப்பரசர் தேர்தலுக்காக இன்று முதல் சிஸ்டைன் தேவாலயம் மூடப்பட்டுள்ளது. சிவப்பு உடையில் அலங்கரிக்கப்பட்டு வாக்களிக்க வரும் கர்தினால்களின் வாக்குச் சீட்டுகள், பாப்பரசரை தேர்ந்தெடுத்த பின்னர் எரித்து அழிக்கப்படுவது மரபாகும். வாக்கெடுப்பு முடிந்த பின்னர், வாக்குச் சீட்டுகளை எரிப்பதால் வெளிப்படும் புகையின் மூலமே பாப்பரசர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதை வெளி உலகத்திற்கு தெரிவிக்கப்படும் அதன்படி, சிஸ்டைன் தேவாலயத்தின் புகைக்கூண்டிலிருந்து வெள்ளை புகை வெளியேறினால், கர்தினால்களின் வாக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று புதிய பாப்பரசர்  தேர்ந்தெடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது 

Advertisement

Advertisement

Advertisement