• Nov 23 2024

மருந்துகள், உணவுப் பொருட்கள், பாடசாலை பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும்! அனுர சூளுரை

Chithra / Aug 18th 2024, 1:37 pm
image


எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மருந்துகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தங்காலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர்,

எளிமைப்படுத்தப்பட்ட வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும், மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

மருந்துகள் மருத்துவபொருட்கள் மீதான வட் வரியை நீக்குவோம், பாடசாலை பொருட்கள் மேலதிக வாசிப்பு புத்தகங்கள் மீதான வட் வரியையும் நீக்குவோம், அதேநேரத்தில் உணவுப் பொருட்களிற்கு வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் அரசாங்கத்தின் முதலாவது வரவு-செலவு திட்டத்திலேயே இதனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.

அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்த தேசத்தை தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்க வேண்டியுள்ளது. உறுதிப்பாட்டுடன் நாங்கள் நாட்டை மீட்போம் என தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி எவரையும் பழிவாங்காது, எனினும் தவறிழைத்தவர்கள் ஊழலில் மோசடியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

மருந்துகள், உணவுப் பொருட்கள், பாடசாலை பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் அனுர சூளுரை எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மருந்துகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.தங்காலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர்,எளிமைப்படுத்தப்பட்ட வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும், மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.மருந்துகள் மருத்துவபொருட்கள் மீதான வட் வரியை நீக்குவோம், பாடசாலை பொருட்கள் மேலதிக வாசிப்பு புத்தகங்கள் மீதான வட் வரியையும் நீக்குவோம், அதேநேரத்தில் உணவுப் பொருட்களிற்கு வட் வரியை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எங்கள் அரசாங்கத்தின் முதலாவது வரவு-செலவு திட்டத்திலேயே இதனை செய்வோம் என தெரிவித்துள்ளார்.அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்த தேசத்தை தேசிய மக்கள் சக்தி பொறுப்பேற்க வேண்டியுள்ளது. உறுதிப்பாட்டுடன் நாங்கள் நாட்டை மீட்போம் என தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தி எவரையும் பழிவாங்காது, எனினும் தவறிழைத்தவர்கள் ஊழலில் மோசடியில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement