• Jun 17 2024

ரணிலுக்காக வண்ணமயமாகும் வவுனியா வைத்தியசாலை!

Tamil nila / May 25th 2024, 8:26 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினை அடுத்து வவுனியா பொதுவைத்தியசாலையில் தடல்புடல் என அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


வடக்குமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுநீரக பிரிவினை திறந்துவைக்கவுள்ளார். 

இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையில் ராணுவத்தின் உதவியுடன் மெருகூட்டி அழகுபடுத்தும் பணிகள் தடல் புடலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறிப்பாக வைத்தியசாலை வளாகத்திற்குள் ஜனாதிபதி பயணிக்கும் பகுதிகளுக்கு மாத்திரம் வண்ணப்பூச்சு பூசப்படுவதுடன் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.

மழையினையும் பொருட்படுத்தாது அவசர அவசரமாக குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



ரணிலுக்காக வண்ணமயமாகும் வவுனியா வைத்தியசாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையினை அடுத்து வவுனியா பொதுவைத்தியசாலையில் தடல்புடல் என அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.வடக்குமாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளையதினம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுநீரக பிரிவினை திறந்துவைக்கவுள்ளார். இதனையடுத்து வவுனியா வைத்தியசாலையில் ராணுவத்தின் உதவியுடன் மெருகூட்டி அழகுபடுத்தும் பணிகள் தடல் புடலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.குறிப்பாக வைத்தியசாலை வளாகத்திற்குள் ஜனாதிபதி பயணிக்கும் பகுதிகளுக்கு மாத்திரம் வண்ணப்பூச்சு பூசப்படுவதுடன் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டு அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.மழையினையும் பொருட்படுத்தாது அவசர அவசரமாக குறித்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement