• Oct 30 2024

வெளிநாட்டில் இருந்து வந்த வவுனியா பெண்; பார்க்கசென்ற கிளிநொச்சி யுவதி செய்த மோசமான செயல்! samugammedia

Chithra / Jun 3rd 2023, 2:08 pm
image

Advertisement

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்ட்டை திருடி, அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான பெண் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

குறித்த பெண் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கு டெபிட் கார்ட்டை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 2 வளையல்கள், ஒரு சங்கிலி மற்றும் 2 காதணிகளை மீட்டுள்ளதுடன், பல தங்க நகைகளை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வந்த வவுனியா பெண்; பார்க்கசென்ற கிளிநொச்சி யுவதி செய்த மோசமான செயல் samugammedia வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்ட்டை திருடி, அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த யுவதி கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதான பெண் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.குறித்த பெண் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கு டெபிட் கார்ட்டை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சந்தேக நபரிடமிருந்து 2 வளையல்கள், ஒரு சங்கிலி மற்றும் 2 காதணிகளை மீட்டுள்ளதுடன், பல தங்க நகைகளை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டு ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை  வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement