• Jan 11 2025

நாட்டில் உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலைகள்

Chithra / Dec 29th 2024, 3:05 pm
image


 

நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளின் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. 

உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகளும் இன்றைய நிலவரப்படி வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 - 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனைய அனைத்து மரக்கறி வகைகளின் விலையும் தற்போது 500 - 800 ரூபாய்க்குள் உள்ளன. 

அத்துடன், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1400க்கும், கிலோ ரூ.1500க்கும், தக்காளி கிலோ ரூ.600 - 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், நத்தார் பண்டிகை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கும்,

ஆனால், அடுத்த ஆண்டு முதல் சில வாரங்களில் தேவைக்கேற்ப மரக்கறிகளின் வரத்து இருக்கும் என்பதால் விலை குறையும் என எதிர்பார்க்கலாம் என மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

நாட்டில் உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலைகள்  நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் கடந்த வாரத்தை விட மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.இதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (29) ஒரு கிலோ போஞ்சியின் மொத்த விற்பனை விலை 350 முதல் 400 ரூபா வரையிலும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 800 முதல் 900 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளது.இதற்கு மேலதிகமாக கரட், வெண்டைக்காய், தக்காளி உள்ளிட்ட பல வகையான மரக்கறிகளின் விலைகள் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளது. உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகளும் இன்றைய நிலவரப்படி வேகமாக அதிகரித்துள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், 160 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 - 400 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஏனைய அனைத்து மரக்கறி வகைகளின் விலையும் தற்போது 500 - 800 ரூபாய்க்குள் உள்ளன. அத்துடன், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1400க்கும், கிலோ ரூ.1500க்கும், தக்காளி கிலோ ரூ.600 - 800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும், நத்தார் பண்டிகை முடிந்து ஒவ்வொரு ஆண்டும் மரக்கறிகளின் விலை அதிகரிக்கும்,ஆனால், அடுத்த ஆண்டு முதல் சில வாரங்களில் தேவைக்கேற்ப மரக்கறிகளின் வரத்து இருக்கும் என்பதால் விலை குறையும் என எதிர்பார்க்கலாம் என மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement