இரணைமடு சந்தை வியாபாரிகள் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை பிரிவு உட்பட்ட இரணைமடு சந்திக்கு அருகில் உள்ள பொது சந்தையில் எந்த ஒரு பொது வசதிகளும் அற்ற நிலையிலும் பாதுகாப்பு இன்மையால் காணப்படுவதினால் இது தொடர்பாக பல தடவைகள் பிரதேச சபையிடம் கோரிய போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக சந்தை வளாகத்தில் சரியான முறையில் வடிகால்கள், வளாகத்தில் உள்ள கட்டிட தொகுதிகளுக்கு சரியான முறையில் பாதுகாப்பின்மையினால் ஐந்து முறை பொருட்கள் களவாடப்பட்டுள்ள நிலையிலும் இவற்றை சரியான முறையில் சீர் செய்து தரும்படியும், காவலாளி ஒருவரை நியமித்து தரும்படியும் கோரிக்கை விடுத்து இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இரணைமடு சந்தையில் மாயமாகும் மரக்கறிகள்- தீர்வு கோரி வியாபாரிகள் போராட்டம். இரணைமடு சந்தை வியாபாரிகள் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை பிரிவு உட்பட்ட இரணைமடு சந்திக்கு அருகில் உள்ள பொது சந்தையில் எந்த ஒரு பொது வசதிகளும் அற்ற நிலையிலும் பாதுகாப்பு இன்மையால் காணப்படுவதினால் இது தொடர்பாக பல தடவைகள் பிரதேச சபையிடம் கோரிய போதும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.குறிப்பாக சந்தை வளாகத்தில் சரியான முறையில் வடிகால்கள், வளாகத்தில் உள்ள கட்டிட தொகுதிகளுக்கு சரியான முறையில் பாதுகாப்பின்மையினால் ஐந்து முறை பொருட்கள் களவாடப்பட்டுள்ள நிலையிலும் இவற்றை சரியான முறையில் சீர் செய்து தரும்படியும், காவலாளி ஒருவரை நியமித்து தரும்படியும் கோரிக்கை விடுத்து இன்று இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.