• Jan 19 2025

வாகன மோசடி - முன்னாள் அமைச்சரிடம் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை

Chithra / Jan 16th 2025, 1:25 pm
image

 

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பயன்படுத்தும் வாகனம் தொடர்பில் பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த வாகனம் உதிரிப்பாகங்களைக் கொண்டு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டதொரு வாகனம் என சந்தேகம் எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

எனினும், விசாரணையின் இடையில் அவர் திடீரென்று சுகவீனமுற்ற நிலையில், விசாரணைக்காக வேறொரு நாளில் வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான மோசடித் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

வாகன மோசடி - முன்னாள் அமைச்சரிடம் ஆரம்பிக்கப்பட்ட விசாரணை  முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா பயன்படுத்தும் வாகனம் தொடர்பில் பாணந்துறை வலான மோசடித் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.குறித்த வாகனம் உதிரிப்பாகங்களைக் கொண்டு சட்டவிரோதமாக பொருத்தப்பட்டதொரு வாகனம் என சந்தேகம் எழுந்துள்ளது.சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.எனினும், விசாரணையின் இடையில் அவர் திடீரென்று சுகவீனமுற்ற நிலையில், விசாரணைக்காக வேறொரு நாளில் வருகை தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வலான மோசடித் தடுப்புப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

Advertisement

Advertisement

Advertisement