• Jan 26 2025

கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில்! வந்தது எச்சரிக்கை

Chithra / Jan 12th 2025, 2:13 pm
image



கரும்புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.

கரும்புகை வெளியிடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அதன் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தைப் பொலிசாரும், வாகனத்தின் வருமான அனுமதிப் பத்திரத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளும் பொறுப்பேற்கவுள்ளனர்.

அதன்பின்னர் 14 நாட்களுக்குள் குறித்த வாகனம் கரும்புகை வெளியிடுவதற்கான காரணம் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்தாக வேண்டும்.

பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் வாகனம் ஓட்டிக் காண்பிக்கப்பட்டு கரும்புகை வௌியாகவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அந்த வாகனத்தை தொடர்ந்தும் பயன்பாட்டில் வைத்திருக்க அனுமதி வழங்கப்படும்.

இல்லையெனில் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த அதிகாரி   குறிப்பிட்டுள்ளார்.

கரும்புகையை வெளியிடும் வாகனங்கள் இனி கறுப்புப் பட்டியலில் வந்தது எச்சரிக்கை கரும்புகையை வெளியிடும் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.அதன் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் போக்குவரத்துப் பொலிசார் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் ஒன்றிணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளனர்.கரும்புகை வெளியிடும் வாகனங்கள் கண்டறியப்பட்டு அதன் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தைப் பொலிசாரும், வாகனத்தின் வருமான அனுமதிப் பத்திரத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அதிகாரிகளும் பொறுப்பேற்கவுள்ளனர்.அதன்பின்னர் 14 நாட்களுக்குள் குறித்த வாகனம் கரும்புகை வெளியிடுவதற்கான காரணம் கண்டறியப்பட்டு, அதனை நிவர்த்தி செய்தாக வேண்டும்.பின்னர் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் வாகனம் ஓட்டிக் காண்பிக்கப்பட்டு கரும்புகை வௌியாகவில்லை என்று நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அந்த வாகனத்தை தொடர்ந்தும் பயன்பாட்டில் வைத்திருக்க அனுமதி வழங்கப்படும்.இல்லையெனில் வாகனங்களை கறுப்புப் பட்டியலில் இணைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த அதிகாரி   குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement